அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு 50% வரி விதிக்க முடிவு செய்தது சர்வதேச வர்த்தகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தினாலும், மறைமுகமாக தங்கம் விலையையும் பாதிக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தங்கம் பொதுவாக உலக சந்தையின் நெருக்கடியின் குறியீடாக பார்க்கபப்டுகிறது. வரலாற்றில் எப்போதும், உலகளாவிய அரசியல் அல்லது வர்த்தக பதட்டம் அதிகரிக்கும் போது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை அதிகமாக வாங்குகிறார்கள். இதனால் தங்கம் விலை உயர்வது இயல்பு. டிரம்பின் முடிவால் அமெரிக்கா-இந்தியா உறவு பலவீனமடையலாம். இது சந்தைகளில் நிச்சயமற்ற சூழ்நிலையை உருவாக்கும்.
எனவே, டிரம்ப் விதித்த வரியின் தாக்கம் நேரடியாக தங்கத்தில் எதிரொலிக்காது. ஆனால் அதன் விளைவாக உருவாகும் அரசியல் பதற்றம், ரூபாய் மதிப்பு, சர்வதேச சந்தை நிலைமை ஆகியவை தங்க விலையை தீர்மானிக்கும். சூழல் பதட்டமாக நீடித்தால் தங்கம் விலை உயரும். அமரிக்காவுடனான வரி குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியுமானால் தங்கம் விலை குறையும்.
முடிவாக, தங்க விலை வரும் நாட்களில் நிச்சயமற்ற பாதையில் நகரும். அரசியல் பேச்சுவார்த்தைகளே அதற்கான விலையை தீர்மானிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.