Thursday, August 21, 2025
HTML tutorial

டிரம்ப் போட்ட போடு! தரைதட்டப் போகிறதா தங்கம் விலை? அமெரிக்காவில் நடந்த அந்த சம்பவம் தான் அதற்கு காரணம்!

“தங்கம் விலை விறுவிறுன்னு ஏறும்ன்னு சொன்னாங்க… ஆனா சரசரன்னு சரியுதே” என்று ஒரு சிலர் தற்போது இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். “ஆனால் இன்றைய நிலவரப்படி உயர்ந்து தானே இருக்கிறது” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இருப்பினும் சராசரியாக பார்த்தால் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. உண்மை தான்… அதற்கு அமெரிக்காவில் நடந்த சம்பவம் ஒன்று தான் காரணம். அதனாலேயே உலக அளவில் தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது.

அதாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்நாட்டு மத்திய வங்கி போன்ற ஒரு அமைப்புடன் கடுமையான மோதல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் அந்த அமைப்பான பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலுக்கு நெற்றிப்பொட்டில் அடிப்பது போல கடுமையான எச்சரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.

டொனால்டு டிரம்ப் தன்னுடைய எச்சரிக்கையில், “அடுத்த சில வாரங்களுக்குள் வரியை குறைக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை அந்த வங்கி சந்திக்கும்” என்று கூறி உள்ளார்.

இதற்கு அளிக்கப்பட பதிலில் வர்த்தகப் போர், நாட்டின் மந்தமான பொருளாதார நிலை மற்றும் நிலையற்ற பணவீக்கம் ஆகியவற்றால் வரி விகிதம் குறைக்கப்படாது என்று அந்நாட்டு பெடரல் வங்கி அறிவித்துள்ளது.

பொதுவாக வட்டி விகிதம் குறைந்தால் டாலர் மதிப்பு சரியும். டாலர் மதிப்பு சரிந்தால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள் என்பதால் தங்கம் விலை உயரும். ஆனால் இங்கே அப்படியே தலைகீழாக நடந்துள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்படாமல் போனால் டாலர் மதிப்பு உயரும் . டாலர் மதிப்பு உயர்ந்தால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய மாட்டார்கள் என்ற காரணத்தால் தங்கம் விலை சரியும் நிலை ஏற்பட்டிருப்பது “இனிமே தங்கம் எல்லாம் எட்டாக்கனி” என்று விரக்தி அடைந்தவர்களுக்கு Good நியூஸ்-ஆகவே இருக்கிறது. இது ஒரு செய்தி மட்டுமே. இதனை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News