Wednesday, April 16, 2025

வெளிநாட்டவர்களுக்கு டிரம்ப் வைத்த பெரிய “ஆப்பு”!டீலுக்கு ok-ன்னா இரு…இல்லைன்னா கிளம்பி போயிடு!

டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடங்கின. குறிப்பாக, அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ள குடியுரிமை இல்லாதவர்களை வெளியேற்றுவதில் கவனம் செலுத்தினார். தற்போது, அமெரிக்கா வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய சவால்களை கொடுத்திருக்கின்றது. சமூகவலைதளங்களில் சில குறிப்பிட்ட கருத்துகளை பகிர்ந்தால், அது அவர்களின் விசாவை ரத்து செய்யவோ அல்லது திரும்பப் பெறவோ காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் பிரிவு வெளியிட்ட புதிய அறிவிப்பில், சமூகவலைதள கணக்குகளை கவனமாக கண்காணிப்பதாகவும், யூத எதிர்ப்பு மற்றும் டிரம்ப் நிர்வாகத்தை விமர்சிக்கும் பதிவுகள் இருக்கும் போதெல்லாம், அமெரிக்காவில் விசா அல்லது குடியுரிமை மறுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிரவாத இயக்கங்களை ஆதரிக்கும் கருத்துகள், உதாரணமாக ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹூதி ஆகியோருக்கு ஆதரவான கருத்துக்கள் பகிர்வதற்கும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பினால், வெளிநாட்டு மாணவர்களின் அமெரிக்கா பயணம் பெரும் கேள்விகளுக்கு அடிப்படையாக மாறியுள்ளது. கடந்த சில வாரங்களில், அமெரிக்கா நூற்றுக்கணக்கான மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. மார்ச் மாதத்தில் 300 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்த புதிய நடவடிக்கைகள், சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிர்வதற்கும், வெளிநாட்டு மாணவர்களின் அமெரிக்க வருகைக்கும் புதிய சவால்களை உருவாக்கியுள்ளன.

Latest news