அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க அதிபர் டிரம்ப் எடுத்த நடவடிக்கை சரியானதுதான் என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவில் வேலை அமெரிக்கர்களுக்கே என்ற நோக்கத்தில் அதிபர் ட்ரம்ப், H1B விசாவுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை ‘உண்மை அறிக்கை’ ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு பதில், குறைந்த சம்பளத்தில் பணியாற்றக் கூடிய வெளிநாட்டினருக்கு வேலை வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டில் H1B விசா பெறும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் எண்ணிக்கை 32 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கர்களிடையே வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, டிரம்பை அதிபராக அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.