Monday, January 20, 2025

டிரம்ப்புக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் – நியூயார்க் நீதிமன்றம்

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப்புக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது

ஆபாச பட நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும் இதில் டிரம்ப் குற்றாவாளி என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், வரும் 10 ஆம் தேதி டொனால்ட் டிரம்பிற்கான தண்டனை விபரம் தெரிவிக்கப்படும் என நியூயார்க் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ள நிலையில், வரும் 20ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதிவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news