Saturday, April 19, 2025

வரி போட்டு விளையாடும் சீனா – அமெரிக்கா : மக்கள் பாவம் இல்லையா..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டார். சீனா பொருட்களுக்கு 34 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 34 சதவீதம் வரி விதிக்கும் என அதிரடியாக அறிவித்தது.

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சீனா பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

சீனா தனது 34 சதவீத வரி அறிவிப்பை திரும்ப பெறவில்லை என்றால் 9-ந் தேதி முதல் சீனா மீது 50 சதவீதம் கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தையும் நிறுத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Latest news