ஈரான் அதிபரை சந்திக்கும் டிரம்ப்? இந்த திடீர் பல்டிக்கு என்ன காரணம் ?

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியை நேரில் சந்திக்க விரும்புவதாக திடீர் பல்டி அடித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக ஆகப் பார்க்கப்படுகிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும், ராணுவ ரீதியிலான அழுத்தங்களை கொடுத்து வந்த டிரம்ப், திடீரென இந்த சமாதானப் பேச்சை கையில் எடுத்திருப்பதன் பின்னணியில் பல முக்கிய அரசியல் நகர்வுகள் இருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ராணுவ மோதல்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் அண்மைக்காலமாக மிகத் தீவிரமடைந்திருந்தன. ஒரு முழு அளவிலான போர் மூளும் அபாயத்தைத் தவிர்த்து, பிராந்தியத்தில் நிலைத்தன்மையைக் கொண்டுவர டிரம்ப் இந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் ஈரானுடன் ஒரு நேரடி பேச்சுவார்த்தை மூலம் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தையோ அல்லது பாதுகாப்பு உடன்படிக்கையையோ ஏற்படுத்த டிரம்ப் திட்டமிடக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போதுள்ள போர் பதற்றம் உலகளவில் கச்சா எண்ணெய் விலையை கடுமையாக உயர்த்தி வருகிறது. இது அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும், டிரம்பின் அரசியல் செல்வாக்கையும் பாதிக்கக்கூடும் என்பதால், பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தைக் குறைக்க அவர் இந்த முயற்சியை செய்கிறார்

கடந்த மார்ச் மாதம் வரை மொஜ்தபா கமேனியை கேலி செய்து வந்த டிரம்ப், தற்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே திரைமறைவில் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான நகர்வுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும், மொஜ்தபா கமேனி அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்..

Related News

Latest News