அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பரஸ்பர வரி குறித்த அறிவிப்பு உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்தியா உள்பட 69 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதேசத்துக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதில் அதிகபட்சமாக சிரியாவுக்கு 41% வரி விதிக்கப்பட்டுள்ளது. லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளுக்கு 40% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை போன்று வியாட்நாம் மற்றும் தைவான் நாடுகளுக்கு 20 முதல் 25 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.