ரஷ்யா, உக்ரைன் இடையேயான போருக்கு ஒரு முடிவு எட்டப்படாத நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்கா, ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. உலகின் இரு எதிரெதிர் சாம்ராஜ்ஜியங்களான அமெரிக்கா, ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையே ஈர்த்துவிட்டது.
தனி விமானம் மூலம் விமான நிலையத்திற்கு வந்த அதிபர் ட்ரம்ப், புடினை எதிர்ப்பார்த்து விமானத்திலேயே காத்திருந்தார். அப்போது தனது நாட்டு விமானத்தில் வந்திறங்கிய புடினின் வருகை மிரளவிடுவதாக இருந்தது. அதனை தொடர்ந்து இரு தலைவர்களும் ஒரே நேரத்தில் விமானத்தில் இருந்து இரங்கி வந்தனர். அப்போது அதிபர் புட்டினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு தலைவர்களும் ஒரே நேரத்தில் நடந்து வந்தபோது அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் பயங்கர சத்தத்துடன் பறந்தது காதுகளை கிழிக்கும்படி இருந்தது. இது ட்ரம்ப் தனது styleலில் புடின்க்கு அதிரவிடும் வரவேற்பு அளித்ததாக பார்க்கப்பட்டது. இதனை அடுத்து ட்ரம்ப், அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களை புட்டினுக்கு அறிமுகப்படுத்தி, அவற்றைப்பற்றி விளக்கினார்.
அடுத்து, இரு தலைவர்களும் ட்ரம்பின் காரில் ஒன்றாக பேச்சுவார்த்தைக்கு கிளம்பினார். அப்போது செய்தியாளர் ஒருவர் எப்போது மனிதர்களை கொலை செய்வதை நிறுத்துவீர்கள் என புடின்னிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு நீங்கள் கூறியது காதில் கேட்கவில்லை என்பது போன்று சைகை செய்து விட்டு புடின் அங்கிருந்து நகர்ந்தார்.