அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டிரம்ப் விதித்த பரஸ்பர விதிப்பு காரணமாக அமெரிக்காவில் பொருட்களின் விலை கடுமையாக உயரக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதனால்,அமெரிக்கர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு வேலைகளில் ஆட்குறைப்பு, பொருளாதாரம், குடியேற்றம் மற்றும் மனித உரிமைகள் மீதான நடவடிக்கைகளை கண்டித்து முழக்கமிட்டனர். நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவுடனான தங்கள் வர்த்தகத்தை நாடுகள் சமன் செய்யாவிட்டால், உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கடுமையான வரிகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.