அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அதிரடி காட்டினார்.
இந்நிலையில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டு உள்ளார். இதனை உடனடியாக செயல்படுத்த வணிகவரித்துறை மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கு அவர் அதிகாரம் அளித்துள்ளார். மேலும் அமெரிக்க திரைப்படத்துறை மிக வேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.