Sunday, September 7, 2025

ஐபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றக் கூடாது – டிரம்ப் எதிர்ப்பு

ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றக் கூடாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார்.

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி செய்து வந்தது. இந்த சூழலில் அமெரிக்கா சீனா இடையே அடிக்கடி வர்த்தக போர் ஏற்படுவதன் காரணமாக சீனாவை மட்டும் சார்ந்திருக்காமல் பல்வேறு நாடுகளிலும் உற்பத்தி மையங்களை நிறுவ வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்தது.

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா ஆகிய இரண்டு நிறுவனங்கள் ஐபோன்களை உற்பத்தி செய்து ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்குகின்றன. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றக் கூடாது எனக் கூறியிருக்கிறார். மேலும் இந்தியாவுக்கு பதிலாக அமெரிக்காவில் உற்பத்தியை பெருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News