நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா பேசியதாவது, திமுக தேச ஒற்றுமைக்கான கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். கார்கில் போருக்கு திமுக அரசு ரூ.100 கோடி திரட்டி கொடுத்தது.
1971ல் இந்தியா – சீனா போர் ஏற்பட்ட போது நிதி திரட்டி கொடுத்தவர், கலைஞர். எனக்கு இந்தி தெரியாது, புரியாது. ஆனால் நான் இந்தியன்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும், நேரு, இந்திராகாந்தி, காங்கிரஸ் என பேசுவது பாஜகவினரின் வாடிக்கையாகிவிட்டது. பாஜக அமைச்சர்களின் பேச்சு சத்தமாக இருந்தது. ஆனால் அதில் சாரம்சம் இல்லை. சண்டை நிறுத்தத்தை அறிவித்தது டிரம்ப், மோடி அல்ல என அவர் பேசியுள்ளார்.