உலகில் கிட்டத்தட்ட 90க்கும் அதிகமான நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய வரிகளை விதித்துள்ளார். இந்தியா மீதும் 50 சதவீதம் வரியையும் விதித்து இருக்கிறார். டிரம்ப்பின் இந்த நடவடிக்கை உலக நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்கி விடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிபர் டிரம்ப் நடவடிக்கைக்கு அந்நாட்டில் இருக்கும் பிரபல பொருளாதார நிபுணர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டின் பிரபல பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான ஸ்டீவ் வான்கேவின் கூறியதாவது : தன்னைத் தானே அழித்துக் கொண்டு எதிரியுடன் ஒருபோதும் மோதக்கூடாது என்பது மாவீரன் நெப்போலியனின் அறிவுரை. இந்த விஷயத்தில் டிரம்ப், நெப்போலியனின் ஆலோசனையைத் தான் பின்பற்ற வேண்டும். பொருளாதாரத்தை உயர்த்துவற்காக என்ற அவரின் வரிவிதிப்பு முற்றிலும் முட்டாள்தனமானது என கூறியுள்ளார்.