கடந்த ஏப்ரல் 22 இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்ததாக கூறி மே 7 ஆம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது.
3 நாட்களுக்கு பின் மே 9 அன்று மாலை போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். இதனை இந்தியா மறுத்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போர் வெடித்தபோது அமெரிக்கா நேரடியாக தலையிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரூபியோ, டிரம்ப் ‘அமைதியின் அதிபர் ‘. “அதனால், இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குச் சென்றபோது, நாங்கள் நேரடியாக தலையிட்டோம். அதிபரால் அங்கு அமைதியை நிலைநாட்ட முடிந்தது” என்று கூறினார்.