கடந்த 2020 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட மொத்த எச்1பி விசாக்களில் 71 சதவிகிதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசா நடைமுறையில் அதிரடி மாற்றங்களை டிரம்ப் கொண்டு வந்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்த வேண்டுமென்றால், எச்1பி விசாவுக்காக கட்டணம் செலுத்தும் நடைமுறை உள்ளது. ரூ. 1.32 லட்சமாக இருந்த எச்1பி விசா கட்டணத்தை ரூ. 88 லட்சமாக (ஒரு லட்சம் அமெரிக்க டாலர்) பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது எச்1பி விசா கட்டண அதிகரிப்பால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.