Saturday, April 19, 2025

டிரம்ப் பற்றவைத்த நெருப்பு! பொருளாதாரம் சுக்குநூறாகி விலைவாசி தாறுமாறாக உயரும்! அமெரிக்க ஃபெடரல் தலைவர் எச்சரிக்கை!

டிரம்ப் அள்ளி வீசும் பரஸ்பர வதிவிதிப்பால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி நிலைகுலைந்து, விலைவாசி தாறுமாறாக உயரும் என்றும் ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரிக்கை விடுத்திருப்பது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்த இறக்குமதி வரிகள் ஃபெடரல் ரிசர்வ் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதோடு கட்டண விகிதங்களும் அதன் மதிப்பீடுகளை விட அதிகமாக இருக்கின்றன என்று பவல் BBC-யிடம் கூறியுள்ளார்.

வர்த்தக கட்டணங்கள் குறித்த நிலையற்ற தன்மை மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பற்றி எறியும் வர்த்தகப் போர் காரணமாக உலக வர்த்தக சந்தைகளில் நிலவும் பரபரப்புக்கு மத்தியில் பவலின் கருத்துகள் வந்துள்ளது சர்வதேச வர்த்தகர்களிடையே முக்கியத்துவம் பெறுகிறது.

வீடுகள் மற்றும் வணிகங்களின் கணக்கெடுப்புகள், அதிலும் குறிப்பாக கட்டணங்கள் காரணமாக அமெரிக்க பொருளாதாரத்தின் நிதி ஆரோக்கியத்தில் சரிவு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளதாக பவல் மேலும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இவை மிக அடிப்படையான கொள்கை மாற்றங்கள்; இதைப் பற்றி எவ்வாறு சிந்திப்பது என்பதற்கான நவீன அனுபவம் இல்லை” என்று சிகாகோவின் பொருளாதார கிளப் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கூறியிருப்பதாக CNN தெரிவித்துள்ளது.

பரஸ்பர கட்டணங்கள் நாட்டில் உற்பத்தியை அதிகரித்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட கணக்குக்கு மாறாக பங்குச் சந்தை இப்போது வரை அதிர்ச்சிகரமான மாற்றங்களைக் கண்டு டிரில்லியன் கணக்கான டாலர் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் குடியேற்றம், நிதிக்கொள்கை மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தின் மீதான ஒழுங்குமுறை ஆகியவற்றில் கொள்கை மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மைகளைப் பற்றி முன்னதாக பவல் பேசியபோது, டவ் 700 புள்ளிகள் சரிந்தன, S&P 500 2.5% சரிந்தது, Nasdaq Composite 3.5% சரிந்தது என்பது தற்போது கவனம் பெறுகிறது.

Latest news