மும்பையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரில் போலியான ஆதார் அட்டையைத் தயாரித்த தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்எல்ஏ ரோஹித் பவார் வெளியிட்டார். போலி ஆதார் அட்டை செயல்முறையை வெளிக்கொண்டு வரவே இதனைச் செய்ததாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து போலி ஆதார் அட்டையைத் தயாரித்ததாக ரோஹித் பவார் மீதும், இணையதளத்தை உருவாக்கிய அடையாளம் தெரியாதவர்கள் மீதும் மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
