நாசாவில் உயர்பொறுப்பில் இருக்கும் 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசாவில் உயர்பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் 2,145 பேரை பணி நீக்கம் செய்ய டிரம்ப் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த அதிரடி முடிவு ஊழியர்கள் மட்டுமின்றி, அமெரிக்காவின் எதிர்கால ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளைக் கடுமையாகப் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது.