ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது கூடுதலாக வரிகளை அதிபர் டிரம்ப் விதித்து வருகிறார். தற்போது இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கும் சீனா மீது அதிபர் டிரம்ப் கவனம் சென்று உள்ளது. சீனா மீது வரிகளை விதிப்பது குறித்து டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக சீனா மீது தனது நிர்வாகம் தடைகளை விதிக்க முடியும் நிருபர்கள் சந்திப்பில் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.