Saturday, July 12, 2025

Back அடித்த டிரம்ப்! ஈரான் மீது குண்டு வீசினால் இதுதான் நடக்கும்! ‘இந்த’ காரணத்தால் தான் இத்தனை தயக்கம்!

என்னதான் “இஸ்ரேலின் பக்கம் நாங்கள் நிற்கிறோம்” என்று மூச்சுக்கு முன்னூறு முறை டிரம்ப் கூறி வந்தாலும் தற்போது வரை அமெரிக்க படைகள் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் லீவிட், நேற்று செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், “ஈரானை தாக்குவது குறித்து டிரம்ப் 2 வாரங்களில் முடிவெடுப்பார்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2 வாரம் வரை டிரம்பின் கால அவகாசத்துக்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் அமெரிக்கா தனது சக்தி வாய்ந்த குண்டை வீசினால் எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இன்னும் சொல்ல வேண்டுமானால் ஈரான், ஒரு மலையின் அடியில் தனது அணுசக்தி மையத்தை இயக்கி வருகிறது. இதனை சாதாரண குண்டுகளால் அழிக்க முடியாது. அமெரிக்கா வசம் இருக்கும் Bunker Buster குண்டுதான் இதற்கு தேவை. அந்த குண்டு பயன்படுத்தப்படும் பட்சத்தில் ஈரானின் அணுசக்தி மையம் முழுமையாக தகர்க்கப்பட முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது. எனவேதான் தாக்குதல் திட்டத்தை டிரம்ப் தள்ளிப்போட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அதாவது  30,000 பவுண்டுகள் எடை கொண்ட Bunker Buster ஏவுகணை வெடிப்பதற்கு முன்பு 200 அடி ஆழம்  துளைத்துச் செல்லும் சக்தி கொண்டது. GPS சிக்னலின் உதவியுடன் இலக்கை கச்சிதமாக தாக்கும் திறன் மிக்கது. 300 அடி ஆழத்தில் மலைகளை குடைந்து ஈரானின் அணுசக்தி மையம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆகயால் 200 அடிவரை மட்டும் துளைக்கும் குண்டு எப்படி, 300 அடி ஆழத்தில் இருக்கும் மையத்தை அழிக்கும் என்பதுதான் தற்போது தலைதூக்கியுள்ள கேள்வி.

நிலைமை இப்படியிருக்க அணுசக்தி மையம் முற்றிலுமாக அழிக்க முடியும் என்பதை உறுதிசெய்தால் மட்டுமே ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டிருப்பதாக தகவல். இதனை “The guardian” செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news