Wednesday, April 16, 2025

Back அடித்த டிரம்ப்! கழுத்தை நெறிக்கும் எச்சரிக்கை! கபளீகரமான உலக வர்த்தகம்! மீறினால் கதை முடிந்துவிடும்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் உலக நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரியை அள்ளி வீசி சர்வதேச அளவில் வணிக பதற்றத்தை ஏற்படுத்தி உலக அளவில் பங்கு சந்தை துவம்சம் செய்யப்பட்ட நிலையில் திடீரென இன்று வரிகளை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். இப்படி திடீரென டிரம்ப் பின்வாங்க என்ன காரணம் என்பதும் இதன் பின்னணி என்ன என்பதை குறித்த தகவல்களும்  இப்போது வெளியாகியுள்ளன.

அனைத்து நாடுகள் மீதும் 10 சதவிகித அடிப்படை வரியை டிரம்ப் விதித்ததோடு கூடுதலாக ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு அளவீட்டில் வரியை டிரம்ப் அறிவித்திருந்தார். அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரியும்  போடப்பட்டதோடு இந்தியா மீது 26% வரியை டிரம்ப் அறிவித்திருந்தார். இது சர்வதேச அளவில் ஒரு வணிக பூகம்பத்தையே உருவாக்கிவிட்டது.

கடந்த பல நாட்களாகவே எலான் மஸ்க் உள்ளிட்ட டிரம்பிற்கு நெருக்கமானவர்களும் சரி, சக குடியரசுக் கட்சியினரும் சரி வரிகளை நிறுத்தி வைக்குமாறு தொடர்ந்து டிரம்ப்-ஐ கேட்டு வந்தனர். “ரெசிப்ரோக்கல் வரியால் வர்த்தகப் போர் ஏற்பட்டு உலகளாவிய சந்தை சரிவைச் சந்திக்கும், பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று பலரும் எச்சரித்தனர். இருப்பினும், டிரம்ப் இவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு தனது நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை என்றே ஒற்றை காலில் நின்றார்.

டிரம்பின் ஆருயிர் நண்பன் என்று சொல்லப்படும் எலான் மஸ்க் கூட தனிப்பட்ட முறையில் டிரம்பிடம் வரிகளை நிறுத்த வைக்கக் கேட்டதாகச் சொல்லப்பட்டபோதிலும் எந்தவொரு முயற்சியும் டிரம்ப் மனதை கரைய செய்ய முயன்று தோல்வியே அடைந்தன. இந்நிலையில் அமெரிக்க Treasury துறையில் இருந்து ஒலித்த புதிய எச்சரிக்கை மணி டிரம்பின் காதுகளை தற்போது துளைத்துள்ளது. அதாவது அமெரிக்காவின் கடன் பத்திர சந்தை என்று சொல்லப்படும் bond market குறித்து Treasury துறை கொடுத்த எச்சரிக்கை காரணமாக மட்டுமே டிரம்ப் தனது ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்தி வைத்துள்ளதாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க Treasury மார்கெட்டில் கடன் பத்திரங்கள் விற்கப்படுவது வரலாறு காணாத அளவுக்கு உச்சம் அடைந்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்திருப்பதால் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை அடுத்த 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Latest news