செங்கல்பட்டில் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சென்ற போது பனிமூட்டம் காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்கிருந்த ஏரிக்கரையோரம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து லாரில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் ஏரியில் மிதந்தன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏரியில் மிதந்த கேஸ் சிலிண்டர்களை அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.