ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராசி திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திரைப்படத்தை ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மதராஸி திரைப்படத்தின் சில காட்சிகளை இலங்கையில் படமாக்கி உள்ளனர். அதற்கான செலவு இலங்கை மதிப்பில் 5 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்து 489 ரூபாய் என்று கூறப்படுகிறது.
இந்தத் தொகையை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தங்களுக்கு வழங்கவில்லை என தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இலங்கையின் துணை தூதரகம் சம்பந்தப்பட்ட ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்திற்கு மூன்று நாட்களில் இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.