ஆணுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர் வினோதமான நிகழ்வு

337
Advertisement

விருத்தாசலத்தில் திருநங்கையாக மாறிய ஆண்மகனுக்கு பெற்றோர்களே மஞ்சள் நீராட்டு விழா நடித்தியுள்ளனர் .
விருத்தாசலதில் கொளஞ்சி,அமுதா தம்பதியினரின் மகன் நிஷாந்த் ( வயது 21). இந்நிலையில், நிஷாந்த் டிப்ளமோ கேட்ரிங் முடித்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவரது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் குழப்பம் கோமடைந்துள்ளனர் .

இதனால் நிஷாந்த் வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சமடைந்து உள்ளார். பின்னர் அவரது பெற்றோர் மகனை மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்து, அவனது உணர்வை புரிந்துகொண்டு , தனது மகன் பெயரை நிஷா என மாற்றியுள்ளனர். மாற்றியதோடு, தனது மகனுக்கு ஏற்பட்டுள்ள இயற்கையின் மாற்றத்தை பூப்பெய்தியதாக கருதி அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி தனது மகனை பெண்ணாக அங்கீகரித்துள்ளனர்.