ரயில்களில் டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண் கட்டாயம் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலாகிறது.
அதன்படி, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட ஐஆர்சிடிசி கணக்குகளை கொண்ட பயணிகள் மட்டுமே இனி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
ஆதார் இணைப்பு இல்லாதவர்கள், இந்த நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது. அதே நேரம், நேரடியாக ரயில் நிலையம் சென்று டிக்கெட் முன்பதிவு செய்வதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பொது முன்பதிவுக்கான 10 நிமிடம் நேரக்கட்டுபாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.