நாளை முதல் (ஜனவரி 1) ரயில்களின் வேகம் அதிகரிப்பு

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜனவரி 1ஆம் தேதி முதல் 65 மெயில், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பால் 5 நிமிடங்கள் முதல் 85 நிமிடங்கள் வரை பயணிகள் தங்களது பயண நேரத்தை சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லம் – தாம்பரம் அதிவிரைவு ரயில் வழக்கமான நேரத்தைவிட 85 நிமிடங்கள் முன்னதாகவும், கோவை – ராமேஸ்வரம் வாராந்திர ரயில் 55 நிமிடங்கள் முன்னதாகவும் சென்றுசேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கவும் : ஜனவரி 1 முதல் ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம்

செங்கோட்டை- சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடம் முன்னதாகவும், சென்னை எழும்பூர் – குருவாயூர் 20 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.

நாகர்கோவில் – தாம்பரம் இடையிலான அந்தியோதயா அதிவிரைவு ரயில் 45 நிமிடங்களும், தூத்துக்குடி – சென்னை எழும்பூர் இடையிலான முத்து நகர் அதிவிரைவு ரயில் 30 நிமிடங்களும் முன்கூட்டியே செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, சென்ட்ரல் – புதுடில்லி, கோவை – சென்ட்ரல், சென்ட்ரல் – போடி நாயக்கனுார், திருச்சி – ராமேஸ்வரம், சென்ட்ரல் – திருப்பதி, தாம்பரம் – நாகர்கோவில் உட்பட 17 விரைவு ரயில்களின் பயண நேரம், தலா ஐந்து நிமிடம் குறைகிறது.

Related News

Latest News