ரயில் ஓட்டுநர்கள் குளிர்பானங்கள் பருக கூடாதென தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் மண்டலம் தடை விதித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திருவனந்தபுரம் ரயில்வே, பணியில் அமரும் முன் ரயில் ஓட்டுநர்கள் மது அருந்தியுள்ளார்களா என்பதை கண்டறியும் பரிசோதனையில், மூச்சு பரிசோதனை கருவி தவறான முடிவை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது. சில வகை குளிா் பானங்கள், இளநீா், வாழைப் பழங்கள் மற்றும் வாய் புத்துணா்வு திரவம் ஆகியவற்றை ஓட்டுநா்கள் பயன்படுத்தும்போது, அவா்கள் மதுபானம் அருந்தியுள்ளதாக கருவி காட்டுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், பெரும் சிக்கல் எழுந்திருப்பதாக கூறும் அதிகாரிகள், சுமூகமான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த, ரயில் ஓட்டுநா்கள் பணிக்கு வரும்போது சில வகை குளிர் பானங்கள் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.