Friday, July 4, 2025

அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 24). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிக்கன் நூடுல்ஸ் வாங்கி அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுள்ளார். அவருக்கு நள்ளிரவில் திடீரெனெ வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மனோஜ்குமாரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே மனோஜ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மனோஜ்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, அவர் 3 நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் அளவுக்கு அதிகமாக நூடுல்சை சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் இறந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news