புயலின்போது செல்போனுக்கு சார்ஜ் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

382
Advertisement

புயல்வீசியபோது செல்போனுக்கு சார்ஜ் ஏற்றிய
இளம்பெண் மரணமடைந்தது அனைவரையும் அதிர்க்குள்ளாக்கியுள்ளது.

இந்தக் காலத்து இளைஞர்கள் செல்போனை
நகையும் சதையும்போல பயன்படுத்தி வருகின்றனர்.
அதேசமயம், அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதை
சரியாகக் கடைப்பிடிப்பதில்லை.

இதனால், விலைமதிப்பற்ற தங்களின் உயிரை இழக்கும்
துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.

பிரேசில் நாட்டின் பாரா மாகாணத்தைச் சேர்ந்தவர் 18 வயதான
இளம்பெண் ரட்ஜா ஃபெரைரா டி ஒலிவெரைரா. இவர் கடந்த வாரம்
தனது செல்போனில் சார்ஜ் ஏற்றிக்கொண்டே பேசியுள்ளார்.

அப்போது திடீரென்று மின்னல் மின்னியுள்ளது.
இதனால் மின்சாரம் மற்றும் மின்னல் தாக்கி சுயநினைவை இழந்துள்ளார்.
உடனடியாக அவரது குடும்பத்தினர் முதலுதவி அளித்துள்ளனர்.

அதேசமயம் ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்துள்ளனனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் முன்பே
ரட்ஜா துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டார்.

ஒரே வாரத்தில் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றியபோது
மின்னல் தாக்கி இறந்த மூன்றாவது நபர் இந்த இளம்பெண் என்று
அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதைத் தொடர்ந்து செல்போன் சார்ஜ் செய்யும்போது
என்னென்ன விபத்துகள் நேரலாம் என்பது குறித்தும்,
உயிரிழப்பு நேராமல் எப்படிக் காப்பாற்றிக்கொள்வது குறித்தும்
அந்நாட்டு வல்லுநர்கள் வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் தெரிவித்துள்ளனர்.