கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா (வயது 22) பட்டதாரியான இவர் போலீஸ் வேலைக்கு விணப்பித்திருந்தார். இதற்காக நடத்தப்பட்ட தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றார்.மேலும் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முந்தின மைதானத்தில் தனது தோழிகளுடன் ஓடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இதையடுத்து ஆதித்யாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போலீஸ் வேலைக்காக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஆதித்யா உயிரிழந்தது அவரது நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
