வாகன ஓட்டியை அடித்து வசூல் செய்த போக்குவரத்து காவலர்

சென்னை அம்பத்தூரில் இருந்து ஆவடி செல்லும் பிரதான சாலையில் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த போக்குவரத்தை சீர் செய்ய தினமும் காலை அலுவலக நேரத்தில் போக்குவரத்து போலீசார் ஈடுபடுவது வழக்கம். ஆனால் அவ்வாறு போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசார் வாகன நெரிசலை சரி செய்யாமல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் அபதாரம் என்ற பெயரில் வசூல் வேட்டை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர் ஒருவரை போக்குவரத்து போலீசார் தாக்கி, வாகனத்தை நிறுத்தி அடாவடியாக அபதாரம் வசூல் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வாகன ஓட்டிகளை அதிர்ச்சடைய செய்துள்ளது.

Related News

Latest News