சென்னை பள்ளிகரணை அருகே வாகனத் தணிக்கையின் போது கார் மோதியதில் போக்குவரத்து முதன்மை காவலர் மேகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போக்குவரத்து போலீசார் மேகநாதன்(35), மடிப்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குடிப்போதையில் காரில் வந்தவர் நிற்காமல் சென்றதால் அவரை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்ற போது அதே கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் சுமார் 20 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட போலீஸார் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் அவர் தானாகவே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து சரணடைந்தார் . அவர் பெயர் சாய்ராம் என்பது தெரிய வந்துள்ளது. தனது குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்று விட்டு கூகுள் மேப்பை நம்பி வந்த போது வழி மாறி சென்றதாகவும் குடிபோதையில் இருந்ததால் பயந்து போய் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
