நாளை கொண்டாட இருக்கும் புத்தாண்டை விபத்து இல்லாமல் கொண்டாட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து காவலர்கள் இணைந்து சாலை ஏற்பட்டுள்ள பள்ளங்களை சிமெண்ட் கலவை கொண்டு அடைத்து வருகின்றனர்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்னை – திருச்சி மற்றும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பெஞ்சல் புயல் காரணமாக சாலைகள் ஆங்காங்கே படும் மோசமாகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இந்த நிலையில் நாளைய தினம் 2025 புத்தாண்டு தினம் என்பதால் அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வெளியில் செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு 2025 ஆம் ஆண்டு எந்த விபத்துகளும் இந்த பள்ளத்தினால் ஏற்படக்கூடாது என மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து காவலர்கள் ஒன்றிணைந்து சிமெண்ட் கலவையை கொண்டு ஆங்காங்கே இருக்கும் பள்ளங்களில் ஜல்லி கொட்டி சிமெண்ட் கலவை போட்டு பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து காவலர்களின் இருந்த செயலுக்கு சக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.