நகர்ப்புற சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுபோல்
காட்டுக்குள்ளும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ள காட்சி
இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆச்சரியமாக இருக்கிறதா..?
இதோ இந்த வீடியோவைப் பாருங்கள், உண்மை புரியும்.
ஜிப் லைனிங் என்பது சாகஸ விளையாட்டுகளில் ஒன்று.
இது குறுக்கீடு இன்றி நிகழ்ந்தால் ரசிப்பதற்கு இனிமையாக
இருக்கும்.
மத்திய அமெரிக்கக் காடுகளில் இந்த விளையாட்டு
மிகவும் பிரபலம்.
அந்த விளையாட்டை மிகவும் ரசனையோடு விளையாடிக்
கொண்டிருக்கும்போது நடுவில் குரங்கு ஒன்று குறுக்கிட்டதால்,
பாதியிலேயே தடைப்பட்டு நிற்கிறது. சாலையில் போக்குவரத்து
நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகளின் மனநிலைதான்
இந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ள சிறுவனின் மனநிலையும்.
ரோப் வேகன் அல்லது வான்வழிக் கேபிள்கள் என்பது 2 ஆயிரம்
ஆண்டுகளுக்குமேலாக சில மேலைநாடுகளில் போக்குவரத்து
முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா, சீனா,
ஜப்பான் ஆகிய நாடுகளில் கிமு 250 ஆண்டுகளிலேயே
இந்தப் போக்குவரத்து முறை பயன்பாட்டில் இருந்துள்ளது.
தற்போதும் சீனாவில் தொலைதூரக் காட்டுப் பகுதிகளை
சென்றடைவதற்கு இந்த போக்குவரத்து முறையே கடைப்
பிடிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியப் புறநகர்ப் பகுதிகளிலும், பள்ளத்தாக்குப்
பகுதிகளிலும் அதன் மறுபுறங்களிலும் பணிபுரியும்
மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதற்கு
சில நேரங்களில் ஜிப் லைனிங் முறையே பயன்படுத்தப்பட்டு
வருகிறது. இதில் உணவு, அஞ்சல் சேவை, வெடிமருந்துகள்
கொண்டுசெல்லுதல் ஆகியவையும் அடங்கும்.