தர்பூசணியில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக உணவுத்துறை அதிகாரி கூறியதை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்பூசணியில் ஊசி செலுத்தப்படுவதாக உணவுத்துறை அதிகாரி சதீஷ்குமார் வதந்தி பரப்புவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினார்.
ஒரு டன் தர்பூசணி பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையான நிலையில் உணவுத்துறை அதிகாரி சதீஷ்குமார் பரப்பிய அவதூறால் தற்போது 2000 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக கூறினர்.
உணவுத்துறை அதிகாரி சதீஷ்குமாரை உடனடியாக பதவியில் இருந்து மாற்ற வேண்டும். பணியிட மாற்றம் செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.