Wednesday, December 17, 2025

சொன்னபடி நடத்திய ‘Tourist Family’ இயக்குநர் அபிஷன், அகிலா திருமணம்..

சசிகுமார், சிம்ரன் என பலர் நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’{ ‘Tourist Family’} , இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே பலரின் கவனத்தையும் பெற்றார் அபிஷன்.

இதற்கிடையே, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போதே, மேடையில் தனது நீண்ட நாள் காதலியான அகிலாவிடம் திருமணம் செய்ய சம்மதமா? என கேள்வி எழுப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – அகிலா திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.

இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ போயஸ்கார்டனில் இவர்களது திருமணம் கோலகலமாக நடைபெற்றது.

இதற்கு முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம் எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன்,அனஸ்வரா விஜயன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ், இயக்குநர்கள் ‘பூ’ சசி, ரஞ்சித் ஜெயக்கொடி மேலும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன்ராஜ், விநியோகஸ்தர் விர்தூஷ், எடிட்டர் பரத் ராம் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தை தொடர்ந்து தனது உதவி இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அபிஷன். இந்த படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News