உலகை மாசுபடுத்தும் டாப் 10 பிரபலங்கள்

316
Advertisement

அறிவியல் வளர்ச்சியால் தூரமாக இருக்கும் நாடுகளுக்கும் விரைவில் போய் வரும் வகையில் இருக்கும் விமானம் மனிதனின் வாழ்க்கையை கற்பனைக்கு மிஞ்சிய அளவுக்கு எளிமையாக மாற்றியுள்ளது.

விமானம் மூலம் உலகம் முழுவதும் பயனுள்ள பயணங்கள் பல நிகழ்ந்தாலும் கூட, ஆடம்பரத்துக்காக சில செல்வாக்கு மிக்க பிரபலங்கள் சுலபமாக காரில் பயணிக்க கூடிய தூரத்திற்கெல்லாம் விமானத்தில் பறப்பது வாடிக்கையாகி விட்டது.

முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டிய இந்த பயணங்கள் அரங்கேறியதால் ஏற்பட்ட கார்பன் வாயு வெளியீட்டை கணக்கிட்டுள்ள ஆய்வு பத்திரிக்கை ஒன்று, அநாவசியமான விமான பயன்பாட்டால் சுற்றுசூழலை மாசுபடுத்தும் டாப் 10 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தை பிடித்திருப்பது அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விப்ட் (Taylor Swift). அவரை தொடர்ந்து குத்துச்சண்டை வீரர் Floyd Mayweather, ராப் பாடகர் Jay-Z, பேஸ்பால் வீரர் Alex Rodriguez, பாடகர் Blake Shelton, இயக்குநர் Steven Speilberg, முன்னணி மாடல் கிம் கர்தாஷியன், நடிகர் மார்க் வால்பெர்க், முன்னணி தொகுப்பாளர் ஓப்ரா Winfrey, மற்றும் ராப் பாடகர் டிராவிஸ் ஸ்காட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் ஏற்படும் 50 சதவீத விமான மாசுவிற்கு 1 சதவீத மனிதர்கள் தான் காரணமாக அமைவதாகவும், மொத்த மாசில் பிரைவேட் ஜெட் மட்டுமே 4 சதவீதம் பங்களிப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. சொந்த சொகுசுக்காக சுற்றுசூழலுக்கு உலை வைக்கும் பிரபலங்களுக்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.