Thursday, December 26, 2024

நாலு நடிகர்கள் நடிக்க மறுத்த ‘வாரிசு’! விஜய்க்கு ஹிட் அடிக்குமா ஆப்பு வைக்குமா?

வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிக்கா மண்டானா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் அடுத்த மாதம் 12ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள ‘வாரிசு’ திரைப்படத்தை பற்றிய சர்ச்சைகள், சிக்கல்கள், அப்டேட்கள் என ஏதோ ஒன்று இணையத்தை வட்டமடித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட வாரிசு படத்தின் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு, இந்த படத்திற்காக முன்னதாக அணுகப்பட்ட தெலுங்கு நடிகர்களை பற்றி பகிர்ந்துள்ளார்.

மகேஷ் பாபு, ராம் சரண், அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸ் ஆகிய முன்னணி தெலுங்கு நட்சத்திரங்களையே வாரிசு படத்திற்காக பரிசீலித்ததாகவும் பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடைசியாக வெளிவந்த விஜயின் ‘பீஸ்ட்’ ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறிய நிலையில், வாரிசு படத்தில், நான்கு நடிகர்கள் நடிக்க மறுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு உச்ச நடிகர்கள் நடிக்க மறுத்துள்ள கதை விஜய்க்கு அடித்த அதிர்ஷ்டமாக அமையுமா அல்லது ஆப்பு வைக்குமா எனபதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Latest news