Friday, December 27, 2024

சென்னையின் டாப் 10 street foods! எல்லாத்தையும் ட்ரை பண்ணி பாத்தாச்சா?

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் சிறப்பம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு உணவு பிரபலமாக இருக்கும் சூழலில் சென்னையின் தெருவோரக் கடைகளில் கிடைக்காத உணவுகளே இல்லை என்று சொல்லலாம்.

வேகவைத்த கொண்டைக்கடலையை வெங்காயம், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து மாங்காய் மற்றும் தேங்காய் சேர்த்து பரிமாறப்படும் சுண்டலை சுவைக்காதவர்களே சென்னையில் இருக்க முடியாது.

பிச்சு போட்ட பரோட்டாவுடன் சிக்கன், உருளைக்கிழங்கு, முட்டை சேர்த்து பரபரப்பாக செய்யப்படும் கொத்து பரோட்டா சென்னைவாசிகளின் டாப் favorite உணவுப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

பர்மாவை பூர்வீகமாக கொண்ட அத்தோ உணவுகள் சென்னையின் தெருக்களை ஆக்கிரமித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரஞ்சு நூடுல்ஸ், புளித்தண்ணீர், முட்டை மற்றும் மசாலாக்கள் சேர்த்து தயாரிக்கப்படும் அத்தோ, தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றது.

மசித்த துவரம் பருப்பு, வெல்லம், தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து செய்யப்படும் இனிப்பு பிரியர்களின் first choice ஆன போளிக் கடைகளை பல தெருக்களில் காண முடியும்.

பூண்டு, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி மற்றும் மஞ்சள் சேர்த்த பொடியை தூவி தயாரிக்கப்படும் பொடி தோசை, சென்னை தெருக் கடைகளிலும் கிடைக்கக் கூடிய popular mini tiffin என்றே சொல்லலாம்.

கடலை மாவு, அரிசி மாவுடன் சீரகம் சேர்த்து பொறிக்கப்படும் எளிமையான மெட்ராஸ் முறுக்கை பெரிதாக தேடாமலே கண்டுபிடித்து விடலாம். கடலைக் கறி, மட்டன் பாயா என எந்த combination உடனும் ருசியை தெறிக்க விடும் இடியாப்பம் விற்கும் கடைகளின் கூட்டத்தை இரவுகளில் கண்கூடாக காணலாம்.

வடை, பஜ்ஜி, போண்டா இல்லாத மாலை நேர டீ, coffeeயை நினைத்து பார்க்க முடியாதவர்கள், அதிலும் அதிகம் விரும்புவது பஜ்ஜியை தானாம். தள்ளுவண்டி கடை முதல் ஸ்டார் ஹோட்டல் வரை விற்கப்படும் இட்லி, சென்னை மட்டுமில்லாமல் தமிழ் மக்களின் டாப் favorite உணவுகளில் முன்னிலை வகிக்கிறது.

பால், ரோஸ் சிரப் மற்றும் வென்னிலா ஐஸ்கிரீம் சேர்த்த ஜிகிர்தண்டா மதுரை famous பானமாக அறியப்பட்டாலும், சென்னையில் ஜிகர்தண்டாவுக்கு தனி ரசிகர் படையே உண்டு. மேலும் பிரியாணி, fried rice, ஷவர்மா, பானிபூரி என evergreen favorite உணவுகளை கொண்ட சென்னையின் உணவுக் கலாச்சாரம் விரிவடைந்து கொண்டே போவது நிச்சயம்.

Latest news