ஒரே நாளில் தக்காளியின் விலை மீண்டும் உயர்வு

கடந்த சில தினங்களாகவே தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், இன்றும் கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் தக்காளியின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80க்கு விற்பனையாகிறது.

ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News