தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில்,1,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி பயிட்டுள்ளனர். தற்போது தக்காளி பயிரிட்ட விவசாயிகள் நடப்பாண்டு கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 10 ரூபாயாக விற்பனையான நிலையில், தற்போது 5 ரூபாயாக குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தோட்டத்திலிருந்து அறுவடை செய்து வண்டிகளின் மூலம் கொண்டுவரும் வாடகை பணம் கூட தக்காளி விற்பனை செய்து கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.