தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு ‘டிட்வா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் வடதமிழகம் நோக்கி நகருகிறது. 9 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக இன்று (நவம்பர் – 28) ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
