தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.50 குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.63,680 க்கும் ஒரு கிராம் ரூ. 7,960 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியும் இரண்டு நாள்களுக்கு பிறகு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ. 105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.