இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. தொடர்ந்து அதிகரித்த தங்கத்தின் விலை ரூ. 64 ஆயிரத்தை கடந்து சென்றது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,920-க்கும், ஒரு கிராம் ரூ.7,990-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.63,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,890-க்கு விற்பனை செய்யப்படுகிறது.