Monday, January 20, 2025

சற்று ஆறுதலை தந்த தங்கத்தின் விலை..இன்றைய நிலவரம் என்ன?

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயந்தது.

இந்நிலையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.57,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest news