Sunday, December 7, 2025

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்., இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை அதிரடி சரிவை சந்தித்தது.

நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.375-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.88 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,210-க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,680-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News