Tuesday, July 1, 2025

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,720 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,340க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,880 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news