Saturday, December 6, 2025

TODAY GOLD RATE : (14-11-2025) ஒரே நாளில் இரு முறை விலை குறைந்த தங்கம்!!

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது.

இந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ரூ.11,840-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ரூ.94,720 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.800 குறைந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ. 180 குறைந்து ரூ.11,740- க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.93,920 க்கும் விற்பனையாகிறது.

நேற்று ஒரே நாளில் காலையும் மாலையும் என 2 வேலையும் விலை ஏறியது. இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளது.

மேலும், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு 3000 குறைந்து பார் வெள்ளி 1.80.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News