சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.2,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,21,600 -க்கும், கிராமுக்கு ரூ.265 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,20,960-க்கும், கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளிவிலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
